வேலி தாண்டிய காற்று ! கவிஞர் இரா .இரவி !
வேலி தாண்டிய காற்று பலரை
வேதனையில் ஆழ்த்தியது வீழ்த்தியது !
தென்றல் புயல் இரண்டும் காற்றுதான்
தென்றல் இதம் தரும் நன்மை தரும் !
புயல் மழை தரும் தீமையும் தரும்
புயல் புரட்டிப் போடும் வாழ்க்கையை !
காற்றின் சினம்தான் கொடிய புயல்
கட்டுப்பாடு இன்றி வீசினால் வினை !
காற்றுக்கு என்ன வேலி என்று அன்றே
கவிஞர்கள் பாடல் பாடி வைத்தனர் !
கோபம் மனிதனுக்கு வந்தாலும் தீமை
கோபம் காற்றுக்கு வந்தாலும் தீமை !
வேண்டாம் என்றும் சினம் என்று
வள்ளுவர் அன்றே எழுதி வைத்தார் !
மனிதன் கோபத்தை அடக்க முடியும்
மனிதன் அடக்குவதில்லை கோபம் !
காற்றின் கோபத்தை அடக்கிட
காற்றைத் தவிர மற்றவரால் முடியாது !
நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும்
நம் கையில் என்பதை உணர்ந்திடுக !
நல்ல தென்றலாகி இதமும் நன்மையும் தருவதும்
கொடிய புயலாகி தீமை தருவதும் காற்றின் கையில் !
கருத்துகள்
கருத்துரையிடுக