ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தியான முயற்சியில் 
வந்தது 
தூக்கம் !

கவனி மூச்சை 
நீளும் 
மூச்சு !

சாய்ந்தன 
மரங்கள் 
வெப்பமயம்  !

வேகம் 
விவேகமென்று 
உணர்த்தியது புயல் !

அழிக்க மனமில்லை 
அலைபேசி எண்
இறந்த நண்பன் !

நேற்று மழை
இன்று புயல் 
நாளை ?

வழிவகுக்கும் 
அழிவிற்கு 
இயற்கையின்    சீற்றம் !


வீழ்ந்தன  மரங்கள் 
விழவில்லை நாணல் 
இயற்கையின் விந்தை !

முதலில் வரம் 
பிறகு தவம் 
நம்பாத பக்தன் !

போனது பெயர் 
பிரபல மருத்துவமனை 
பிரபலம் மருத்துவத்தால் !

நாடியை வைத்து அன்று 
சொத்தை வைத்து இன்று 
மருத்துவம் !

நம்பிக்கையில்லாத தீர்மானம் 
அறத்தின் மீது 
அநீதியின் வெற்றி !

இறுதியில் வெல்லும் சரி 
இடையில் என் தோற்கிறது 
தர்மம் !

கெட்டவர்கள் பெருகி 
நல்லவர்கள் குறைவது 
நாட்டு நடப்பானது !
 
படிக்காமலே 
பாடியது  
சிள் வண்டு !

இருப்பை  உணர்த்தி 
இரையானது பாம்புக்கு 
தவளை ! 
.

கருத்துகள்