ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  !  கவிஞர் இரா .இரவி !

கழிவறை சுத்தம் செய்வதை 
குடித்து மகிழும் அவலம்
குளிர்பானம் !

தண்ணீருக்குப் பதிலாக 
அருந்திடும் கொடுமை 
குளிர்பானம் !

நடிகர் விளம்பரத்தில் ஒரு முறை 
நாம் பலமுறை குடிக்கிறோம் 
குளிர்பானம் !

இரண்டு நாள் போட்டால் 
பல்லையும் கரைக்கும் 
குளிர்பானம் !

அயல்நாட்டில் தடை 
நம்நாட்டில் தாராளம் 
குளிர்பானம் !

விலை கொடுத்து வாங்குகிறோம் 
உடல் நலம் கெடுக்கும் 
குளிர்பானம் !

வழங்காதீர் விழாக்களில் 
விருந்தினருக்குத் துன்பம் 
குளிர்பானம் !

நவீனம் என்ற பெயரில் 
நலம் கெடுக்கும் 
குளிர்பானம் !

இயற்கை நன்மை 
செயற்கை  தீமை 
குளிர்பானம் !

பழரசம் என்பர் 
பழரசம் அன்று 
குளிர்பானம் !

திருந்துவது என்றோ ?
வாங்கவில்லை நல்ல இளநீர் 
வாங்குகின்றோம் கொடிய குளிர்பானம் !

கருத்துகள்