பணத்தின் மறுபக்கம் ! கவிஞர் இரா .இரவி !
பணத்தின் மறுபக்கம் உழைப்பு உள்ளன
பண்போடு உழைத்துப் பணம் ஈட்டுகின்றனர் !
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்திட
அவசியம் தேவைப்படுகின்றது பணம் !
நேர்மையான வழியில் வந்த பணம்
நிம்மதியான துக்கம் தந்து மகிழ்விக்கும் !
குறுக்கு வழியில் வந்த பணம்
குதூகலத்தை அழித்துக் கவலை தரும் !
பணம் ஈட்டுவது தவறில்லை ஆனால்
பணம் பணம் என்று அலைவது தவறு !
வந்த வருமானத்தில் சிறு பகுதியாவது
வறியவர்க்கு உதவி செய்திட வேண்டும் !
ஏழைகளுக்கு உதவுவதில் இன்பம் உண்டு
ஈந்துப் பாரத்தால் அவ்வின்பம் தெரியும் !
வாரி வழங்கிடும் வள்ளல் ஆகாவிடினும்
வழங்கவே வழங்காத கஞ்சனாக வேண்டாம் !
பணத்தைவிட உயர்வானது நல்ல குணம்
பணக்காரனைவிட நல்லவனே என்றும் வாழ்வான் !
மனிதாபிமானம் மனதில் என்றும் இருக்கட்டும்
மனிதனைவிட பணம் என்றும் பெரிதல்ல !
அரசாங்கத்தால் அச்சடிக்கப்பட்ட காகிதம்தான்
அதைத்தாண்டி வேறு ஏதும் சிறப்பில்லை !
பணத்தாசையால் பலர் நிம்மதி இழந்தனர்
பணத்தாசையால் பலர் உறக்கம் இழந்தனர் !
ஆசையே அழிவுக்கு காரணம்என்றார் புத்தர்
ஆசையை அழிக்காவிடினும் குறைத்து வாழ்வோம் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kav
கருத்துகள்
கருத்துரையிடுக