படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !






ஊர்வலத்தில் மலர்கள் 

பார்த்து இருக்கிறோம்
மலர்களில் நத்தையின் ஊர்வலம் !

படிப்படியாக முன்னேறினால்
பயமில்லை
வாழ்க்கையில் !

வைக்கலாம் பட்டிமன்றம்
மலர்கள் அழகா ?
நத்தை அழகா ?

முதுகில் பாரம் உண்டு
நெஞ்சில் பாரம் இல்லை
பயணம் இனிது !

வண்டுக்கும் நத்தைக்குமான
போட்டியில்
வென்றது நண்டு !

கருத்துகள்