வயிற்றில் பசியோடு
வரைகிறான்
பசுமை ஓவியம் !
மரம் வளர்க்கச் சொன்னோம்
செவி சாய்க்கவில்லை
மரம் வரையவாவது விடுங்கள் !
சோலை வரையும்
ஓவியன் வாழ்க்கை
பாலை !
திறமைகள் இருந்தும்
வளமாக வழி இல்லை
சமுதாயத்தில் !
சுவற்றின் அழுக்கு நீங்கி
அழகிய ஓவியமானது
மனிதனின் மன அழுக்கு ?
கருத்துகள்
கருத்துரையிடுக