கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! செழுமை மிகு தமிழுக்கேன் சமற்கிருத எழுத்துக்கள் ! கவிஞர் இரா .இரவி !
அவர்கள் தந்த தலைப்பு !
செழுமை மிகு தமிழுக்கேன்
சமற்கிருத எழுத்துக்கள் ! கவிஞர் இரா .இரவி !
இல்லாதவன் கடன் வாங்கலாம்
இருப்பவன் கடன் வாங்கலாமா ?
சொற்களின் பெட்டகம் களஞ்சியம் தமிழ்
சமற்கிருத எழுத்துக்கள் தமிழிலில் எதற்கு ?
வேட்டி என்ற அழகான சொல் இருக்க
வேஷ்டி என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?
இராசா என்ற இனிய சொல் இருக்க
இராஜா என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?
ரோசா என்ற நல்ல சொல் இருக்க
ரோஜா என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?
இந்து என்ற இனிய சொல் இருக்க
ஹிந்து என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?
செயம் என்ற சொல் செழிப்பாக இருக்க
ஜெயம் என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?
இராமேசு என்ற சொல் தமிழிலில் இருக்க
இரமேஷ் என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?
சுரேசு என்ற சொல் தமிழிலில் இருக்க
சுரேஷ் என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?
கணேசு என்ற சொல் தமிழிலில் இருக்க
கணேஷ் என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?
சோசப் என்ற என்ற சொல் தமிழிலில் இருக்க
ஜோசப் என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?
நட்டம் என்ற சொல் தமிழிலில் இருக்க
நஷ்டம் என்ற சொல்வதும் எழுதுவதும் ஏன் ?
இருபத்தி ஆறு எழுத்துக்கள் மட்டுமே உள்ள
ஆங்கிலத்தில் வேறு எழுத்துக்கள் சேர்ப்பதில்லை !
இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்கள்
இருக்கின்றன இனிமையான தமிழில் !
இன்னும் எதற்கு சமற்கிருத எழுத்துக்கள்
இனி அவற்றை தவிர்த்து எழுதுவோம் !
உணவில் கலப்படம் உடலுக்கும்
உயிருக்கும் கேடு தரும் கவனம் !
உன்னத மொழியான தமிழில் கலப்படம்
ஒப்பற்ற மொழிக்குக் கேடு தரும் !
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக