படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
மழைக்கு ஒழுகாது
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
தோற்றனர்
பொறியாளர்கள்
குருவியிடம் !
இவ்வளவு நேர்த்தியாக
மனிதனாலும் முடியாது
கூடு கட்ட !
மழைக்கு ஒழுகாது
வெயிலும் படாது
குருவியின் வீடு !
வீடு கட்டிப்பார்
பழமொழி மாற்றுங்கள்
குருவிக் கூடு கட்டிப்பார் !
கற்றுக் கொள்ளுங்கள்
கைவினைக் கலையை
குருவியிடம் !
கருத்துகள்
கருத்துரையிடுக