படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் 



படத்திற்கு ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

பகிர்ந்து உண்ணுக 
திருக்குறள் கடைபிடிக்கும் 
ஏழைக்குடும்பம் !

வறுமையிலும் 
செம்மை 
சேவல் நேசம் !

பெண்ணின் வேலையைப் 
பகிர்ந்து வாழ்வதே 
ஆண்மைக்கு அழகு !

அதிசயம் 
குடும்ப அட்டை அரிசியில் 
கற்கள்  இல்லையென்றால் !
 

கல் எடுத்து 
உலை வைத்து 
பசியாற வேண்டும் !

கருத்துகள்