ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  !     கவிஞர் இரா .இரவி !

திரைகடல் ஓடி 
திரவியம் தேடினால் 
சுடுகிறான் சிங்களன் !

வெட்ட வெட்ட 
உயர்ந்தது 
தென்னை !

அறிந்ததில்லை 
இளநீரின் சுவை 
தென்னை !

வேற்றுமையில் ஒற்றுமை 
இந்தியா மட்டுமல்ல 
இணைகளும்தான் !

உள்ளே  அனுமதி  இல்லை
மதிப்பு  உண்டு 
காலணி !

வேண்டாம் 
சூடம்  
சுற்றுச்சூழல் மாசு !

பெயருக்கு இல்லாமல் 
காரணப் பெயராகட்டும் 
அறங்காவலர் !

அறம் செய்ய 
விரும்பினால் போதாது 
செய்க அறம்   !

விடிந்து வெகுநேரமாகி  
கூவியது  
சோம்பேறி சேவல் !

வானில் வட்டமிடும் 
பருந்து 
பயத்தில் குஞ்சுகள் !

இரண்டையும் காணலாம் 
என்றாவது ஒருநாள் 
சூரியன் சந்திரன்   !

மீண்டும் துளிர்த்தது 
பட்டமரம் 
மழை !

வகைகள் எத்தனை
வரையறுக்க முடியாது 
மலர்கள் !

ரொட்டி 
யார் போட்டாலும் 
வாலாட்டும் நாய் !

குறைக்கும் நாய் 
கடிக்காது பொய்
கடிக்கும் !

சொல் செயல் சிந்தனை 
அறம் இருந்தால் 
சிறக்கும் வாழ்க்கை !




கருத்துகள்