ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !    கவிஞர் இரா .இரவி !

படிக்காமலே ஆசிரியரானது 
குழந்தை 
விளையாட்டில் !

தட்டிக் கொடுத்து 
தூங்க வைத்தது குழந்தை 
பொம்மையை !

குழந்தை இல்லாத வீடு 
நிறைந்து இருந்தன 
பொம்மைகள் !

வருந்தினேன் 
பார்த்தபோது 
பல்லியின் வாயில் பூச்சி !

நிறுத்தியது கத்துவதை 
பாம்பின் வாயில் 
தவளை !

முடிவுக்கு வந்தது 
மீன் வளர்க்கும் ஆசை 
ஒவ்வொன்றாய் இறந்தன !

குளத்தில் உள்ள நிலவை 
கடித்துத் தோற்றன 
மீன்கள் !

சின்ன மீனை உண்ட பெரிய மீனை
உண்டான் 
மனிதன் !

புழு வைத்து மீன் பிடித்து 
உண்ட மனிதன் மாண்டதும்   
உண்டது புழு !

சிலந்தி வலை 
விழுந்தது பூச்சி
மகிழ்வில் சிலந்தி !

மனமில்லை 
மழை ரசிக்க 
பசி  !

கறுப்புப்பணம்  ஒழிப்பதாகச் சொல்லி 
ஒழித்தனர்  வெள்ளைமன
மனிதர்களின் வாழ்வை !

அன்பே சிவம் 
கையில் 
சூலாயுதம் !

போய் சொன்ன வாயுக்கு 
போசனம் கிடைத்தது 
சோதிடர் !

எல்லை தாண்டி 
கண்டிப்பதாகக் கடிந்தனர்
இளையோர் !

நனையவில்லை  மழையில் 
மேகத்துக்கு மேல் !
பறந்த பறவை 

நகரும் மரங்கள் 
உண்மையில்லை 
தொடர்வண்டிப் பயணம் !

சிறிதாகவே தெரியும் 
காணும் யாவும் 
உச்சத்தில்  இருந்தால் !

சுருக்கச் சுருக்க 
பொருள் விரியும் 
ஹைக்கூ !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
Attachments area

கருத்துகள்