நவ-29. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினக் கவிதை. -ப.கண்ணன்சேகர், திமிரி. பேச :9698890108.

நவ-29. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினக் கவிதை.

-ப.கண்ணன்சேகர், திமிரி.
பேச :9698890108.
------------------------------------------------------------------------------------
தென்னாட்டு சாப்ளின் தெவிட்டாத நகைச்சுவை
திரையுலக நாயகன் செந்தமிழ் கலைவாணர்!
பண்பாட்டு முரசொலி பட்டினத்து கிந்தனார்
பகுத்தறிவு சுடரொளி பசிபோக்கும் வள்ளலார்!
விண்ணளவு சிந்தனை விவேக பேச்சாற்றல்
வருவோர்க்கு உதவிடும் வளமான உள்ளத்தார்!
தன்னிகர் இல்லத்தாள் தனித்துவ உவமையர்
தன்மான உயர்வாளர் திராவிட பற்றாளர்!
சம்பந்த முதலியார் சூட்டிய கலைவாணர்
சரித்திர திருப்பெயராய் சாதனை படைத்தது!
எம்மத மக்களும் ஏற்றுகொள்ளும் நடிகனாய்
எளிமையில் என்.எஸ்.கே என்றுமே வாழ்ந்தது!
தம்மது பொருள்கொண்டு தந்தைமகான் காந்திக்கு
திருவுருவ சிலைவைத்த தேசமிகு பற்றது!
அம்மினும் அழுத்தமாய் அறிவியல் கருத்தினை
அறியாமை போக்கிட அள்ளிதந்த உள்ளமது!
மானிட சிரிப்பினில் மகத்துவம் கண்டவர்
மனம்விட்டு நகைத்திட மருத்துவம் சொன்னவர்!
தேனினும் இனிமையாய் தன்குரல் கொண்டவர்
தேம்பிய ஏழையர்க்கு தேடியே உதவியவர்!
ஞானியாய் சிந்தித்து ஞயம்பட சொன்னவர்
நியாயத்தை சொல்லியே நல்வழி காட்டியவர்!
கூனிய சமூகத்தை கோலுன்ற் வைத்தவர்
கூடியவர் நெஞ்சத்தில் கொள்கையை தைத்தவர்!
-ப.கண்ணன்சேகர், திமிரி.
பேச :9698890108.

கருத்துகள்