படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
நன்றி .திரு .தமிழ் அரசு !
இனிய காலை வணக்கம்..
...........................................
இன்றைய நாள் உற்சாகமும், உத்வேகமும் தரும்
நாளாக உங்களுக்கு அமையட்டும்..
இன்றைய சிந்தனை..
....................................
''உலகில் நானே உயர்ந்தவன்.''
...................................................,,,...
ஒரு சமயம் யோகி ஒருவர் ஒரு ஞானியிடம் வந்தார்.
அவர் ஞானியிடம்,சாமீ... எனக்கு ஆகாயத்தில் பறக்கும் சக்தி இருக்கிறது
.பூமிக்குக் கீழ் நீண்ட நேரம் புதையுண்டு மூச்சை
அடக்கும் சக்தி இருக்கிறது.தண்ணீருக்குள் அதிக நேரம் மூழ்கி இருக்கும் அபரிமிதமான சக்தியும் இருக்கிறது“ என்றார் பெருமையாக.
ஞானி அவர் சொன்னதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.யோகிக்குக் கோபம் வந்தது.
இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல்,“சாமீ... இந்த விசயங்கள் எல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை அல்லவா...?
அப்படியென்றால்,
உலகில் நான் மட்டும் மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்பதைத் தங்களின் வாயால் சொல்லுங்கள்“ என்றான்.
ஞானி அந்த யோகியைக் கூர்ந்து பார்த்தார்.
பேச்சில் மட்டுமல்ல, அவரது கண்களிலும்அகந்தை சுடர் விட்டது.
அதை அழிக்க எண்ணிய ஞானி,ஐயனே... பாருங்கள்...
பறவைகள் ஆகாயத்தில் பறக்கின்றன.புழுக்கள், விஷ ஜந்துக்கள் போன்றவை பூமிக்கடியில் நீண்ட காலம் வாழ்கின்றன.
மீன்கள் தண்ணீருக்குள்ளேயே பிறந்து வாழ்கின்றன.
இவையெல்லாம் எனக்கும் சாத்தியம் என்கிறீர்கள்.
அப்படிப்பட்ட அற்ப ஜந்துக்களைப் போலத்தான் இப்போது நீங்கள் எனக்குத் தெரிகிறீர்கள்.அவையெல்லாம் தெரிந்ததால்
உங்களுக்கு என்ன பயன்...?“ என்று கேட்டார்.
யோகி விழித்தார்.
“பறப்பதால், பூமிக்கடியில் மூச்சை அடக்குவதால் நீங்கள் அடையப் பாகும் லாபம் என்ன?“ திரும்பவும் கேட்டார் ஞானி.
யோகி பதில் சொல்லத் தெரியாமல் நின்றார்.
ஞானி புன்னகைத்து,
“உலகில் மனிதன் கடைபிடிக்க வேண்டியவிஷயங்கள் எவ்வளவோ உள்ளன.கருணை போன்ற நற்குணங்களை விருத்தி செய்ய வேண்டும்.
அகந்தை போன்ற தீய குணங்களை விட்டொழிக்க வேண்டும்.இவற்றை விட்டு விட்டு பறப்பதாலும்,
மூச்சை அடக்குவதாலும் யாதொரு பயனும் இல்லை.“ என்றார்.
“உலகிலேயே நான் தான் உயர்ந்தவன், வஸ்தாது“ என்ற அகந்தை கொண்டிருந்த அந்த யோகி,
ஞானியின் விளக்கத்தைக் கேட்டு வெட்கித் தலை குனிந்தான்..
ஆம்,நண்பர்களே
நான், எனது என்ற அகந்தை யார்,யாருக்கு இருக்கிறதோ அவர்கள் துறவி வேடம் பூண்டாலும் துறவி அல்ல.
நான் என்ற அகந்தை யார்,யாருக்கு இல்லையோ
அவர்கள் இல்லறத்தில் இருந்தாலும் துறவியே..

கருத்துகள்
கருத்துரையிடுக