ஜன்னல் நிலவு : கவிஞர் இரா .இரவி
By கவிதைமணி | Last Updated on : 24th October 2016 05:23 PM | அ+அ அ- |
அமாவாசையன்றும் தோன்றும் ஜன்னல் நிலவு அந்த எதிர் விட்டு நிலவிற்கு விடுப்பே இல்லை ! சூரியன் ஒளியை வானத்து நிலா பிரதிபலிக்கும் சுந்தரியின் ஒளியை சுந்தரன் பிரதிபலிக்கின்றேன் ! வானத்து நிலாவால் அல்லி மலர் மலரும் வஞ்சி என்ற நிலாவால் நான் மலர்கிறேன் ! வானத்து நிலவோ தினமும் ஒரு வடிவம் வஞ்சி அவளோ தினமும் ஒரே வடிவம் ! இரவில் மட்டுமே தெரியும் வான் நிலா பகலிலும் இரவிலும் தெரியும் நிலா அவள் ! முழு நிலவாய் என்றும் அழகாய் ஒளிர்பவள் முகத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி அவள் ! ஒரே ஒரு பார்வைதான் ஜன்னல் வழியே ஒரு நாள் முழுவதும் ஆற்றல் கிடைக்கும் ! இதழ்கள் அசைத்து எதுவும் பேசாவிட்டாலும் விழி வழி அனைத்தும் பேசி விடுகிறாள் கள்ளி ! சில நிமிட தரிசனம் கிடைக்காது போனால் சிந்தை அது பற்றியே நினைத்து சோகமடையும் ! சிக்கி முக்கி கற்கள் உரசினாள் தீ வரும் செல்வியின் பார்வை உரசினாள் காதல் வளரும் ! மகிழ்ச்சியாக பார்வைக் கணை வீசினால் மனசு மகிழ்ச்சியில் பொங்கி வழியும் ! விடுமுறையின்றி தினமும் வரும் ஜன்னல் நிலவு வன்முறையின்றி என்னை வாழ வைக்கும் நிலவு !
கருத்துகள்
கருத்துரையிடுக