தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
பட்டாசு சத்தம் ! கவிஞர் இரா .இரவி !
பட்டாசு சத்தம் கேட்கும் போதெல்லாம்
பரவவில்லை மகிழ்ச்சி என்றும் எனக்கு !
பட்டாசு சத்தம் கேட்கும் போதெல்லாம்
படரும் கொடிய தீயே நினைவில் வருகிறது !
பட்டாசு விபத்தால் உயிரிழந்த பல
பரிதாபங்கள் நினைவில் வருகின்றன !
பட்டாசுப் பட்டு பாவம் சிறிய
பிஞ்சுகள் கூட கருகியதுண்டு !
கோயில் விழாவில் பட்டாசு வெடித்த
கொடூரங்கள் நினைவில் வருகின்றன !
தீபாவளியன்றே பட்டாசு விபத்தால்
தீயுக்கு இரையான நிகழ்வு நினைவுக்கு வந்தது !
தீபாவளியன்றே குடியிருந்த கூரையில்
தீப்பிடித்து குடிசை இழந்தோர் உண்டு !
பட்டாசு செய்யும் தொழிலுக்கு வந்து
படிப்பை விட்டோர் நினைவுக்கு வருகின்றனர் !
பட்டாசு தொழிற்சாலை விபத்தில்
பலியான தொழிலாளர்கள் நினைவு வந்தது !.
ஏழைக்குழந்தை பட்டாசு கிடைக்காமல்
ஏங்கிய நிலைகளும் நினைவிற்கு வந்தது !
பட்டாசு விபத்தால் ஆதரவற்றோர் ஆன
பல குடும்பங்கள் நினைவில் வந்தன !
கரி காசாகுது நெய்வேலியில்
காசு கரியாகுது தீபாவளியில் நினைவிற்கு வந்தது !
பட்டாசுக்கு வீணாய் செலவிடும் பணத்தை
பண்போடு ஆதரவற்றோர் விடுதிக்கு வழங்கலாம் !
பட்டாசுக்கு வீணாய் செலவிடும் பணத்தை
பயன் தரும் நூல்கள் வாங்கி மகிழலாம் !
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக