http://www.dinamani.com/…/மனம்-எனும்--மாயப்பேய்--கவிஞர்-இரா…
--
முகப்பு ஸ்பெஷல்ஸ் கவிதைமணி
...
--
முகப்பு ஸ்பெஷல்ஸ் கவிதைமணி
...
மனம் எனும் மாயப்பேய்: கவிஞர் இரா .இரவி
By கவிதைமணி | Last Updated on : 17th October 2016 04:05 PM | அ+அ அ- |
மனம் ஒரு குரங்கு என்பது முற்றிலும் உண்மை
மனத்தைக் கட்டுப்படுத்துவது மனிதனின் கடமை !
குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்பதால்
குரங்கின் குணம் கொஞ்சம் இருப்பது உண்டு !
விலங்கு குணம் மனிதனுக்கு வரும் அதனை
விவேகமாகச் சிந்தித்து அகற்றிட வேண்டும் !
மனம் இரண்டு வகை உண்டு உணர்ந்திடுக
மனதில் தேவதை உண்டு சாத்தானும் உண்டு !
தேவதை நல்லது மட்டுமே சொல்லும்
தவறாது கேட்டு நடந்தால் வாழ்க்கை சிறக்கும் !
சாத்தானின் கெட்டதுக்குச் செவி சாயத்தால்
சீரழிவிற்கு உடன் வழி வகுக்கும் !
அடுத்தவரின் உயர்வினைக் கண்டு
அந்த தேவதை மனம் மகிழ்ந்து வாழ்த்தும் !
சாத்தானோ பொறாமைத் தீ வளர்க்கும்
செவி சாய்க்காமல் இருப்பது நலம் !
எண்ணம் போல வாழ்க்கை என்பது
என்றும் முற்றிலும் உண்மை !
நல்லது எண்ணிட நல்லது நடக்கும்
அல்லது எண்ணிட அல்லது நடக்கும் !
உதவி செய்யும் உள்ளம் இருந்தால்
உயர்வு வாழ்க்கையில் தானாக அமையும் !
தனக்காக தன்னல வாழ்வு விடுத்து
தன்னை நம்பியவர்களுக்காக வாழ்வது சிறப்பு !
என்ன நினைத்தாய் என்று கேட்டால் உடன்
இன்னது நினைத்தேன் எனச் சொல்லும் !
நினைவு நல்லது எப்போதும் வேண்டும்
நினைவு செயல் சொல் நல்லது வேண்டும் !
மனதாலும் மற்றவருக்கு தீங்கு நினைக்காது
மனத்தைச் செம்மையாக வைத்திருக்க வேண்டும் !
கெட்ட எண்ணங்களை உடன் நீக்கிட வேண்டும்
நல்ல எண்ணங்களை மட்டுமே வைத்திடல் வேண்டும் !
தான் என்ற அகந்தை ஒருவருக்கு வந்துவிட்டால்
தள்ளிவிடும் படு பாதாளத்தில் கவனம் வேண்டும் !
மனசாட்சிக்குப் பயந்து வாழ்வதே சிறப்பு
மனம் ஒரு கோயில் மதித்து வாழ வேண்டும்
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்
கருத்துரையிடுக