வசப்படுவதில்லை
வாசிக்கும் அனைவருக்கும்
புல்லாங்குழல் !
வைத்துக்கொள்வதில்லை
வந்த காற்றை
புல்லாங்குழல் !
வரைந்திட்ட
ஓவியர் யாரோ
மயில் தோகை !
தோற்றுப்போனேன்
பிடிக்க முயன்று
வண்ணத்துப்பூச்சி !
முறைத்துப்பார்த்தான்
சோம்பேறி
வண்ணத்துப்பூச்சி !
ஞானப்பால் வேண்டாம்
பசும்பால் போதும்
பசித்து அழும் குழந்தை !
மூலமொழி
உலகமொழி ஆங்கிலத்திற்கும்
தமிழ் மொழி !
வசந்தத்திற்கு மகிழவுமில்லை
இல்லை உதிர்வுக்கு வருந்தவுமில்லை
மரம் !
மகிழ்ச்சி என்று தொடங்கி
துன்பத்தில் முடிந்தது
மது !
மனிதர்களில் மட்டுமல்ல
புறாக்களிலும் உண்டு
கருப்பு வெள்ளை !
வழிவகுத்தன
விபத்திற்கு
ஆபாச சுவரொட்டிகள் !
உண்டால் பலம்
கிளைகள் பலமில்லை
முருங்கை !
பெருகியது
முதிர்கன்னிகள் மட்டுமல்ல
முதிர் காளைகளும்தான் !
.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக