பெண்ணியம் ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பெண்ணியம் ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


எழுத்திலும் அநீதி 
ஆண் நெடில் தொடக்கம் 
பெண் குறில் தொடக்கம் !

கணவனை இழந்தவள் 
விதவை சரி 
மனைவியை இழந்தவன் ?

மணமான பெண்ணிற்கு 
தாலி அடையாளம் சரி 
மணமான ஆணிற்கு ?
.
ஆட்டிற்குப் பெண் பிறந்தால் மகிழ்ச்சி 
மாட்டிற்குப்  பெண் பிறந்தால் மகிழ்ச்சி 
பெண்ணிற்குப் பெண் பிறந்தால் ஏன் இகழ்ச்சி ?

கருத்துகள்

கருத்துரையிடுக