சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒன்றாகத் திகழும் ஓவியர் P.N. கேசவன் ! சந்திப்பு ,படங்கள் கவிஞர் இரா .இரவி !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒன்றாகத் திகழும் ஓவியர் P.N.  கேசவன் ! சந்திப்பு ,படங்கள் கவிஞர் இரா .இரவி !


ஓவியர் P.N.  கேசவன் . வயது 71.குடும்ப வசதி இன்மையால் முறைப்படி ஓவியம் பல முடியாத ஓவியர் .பிரபலங்கள் பலரை வரைந்து அவர்களிடமே கையொப்பம் வாங்கி அதனை பொக்கிசமாக பாதுகாத்து வருகிறார் .

சிறு வயதில் தந்தை பெரியாரை வரைந்து அவரிடம் கையொப்பம் வாங்கிய பொழுது அதனை ஏலத்தில் விட்டு விட்டனர் .எனக்கு அந்த ஓவியம் வேண்டும் என்று அழுது உள்ளார் .சிறுவன் அழுவதை பார்த்த  மணியம்மை   அவர்கள் ,அந்த ஓவியத்தை வாங்கி ஓவியர் கேசவன் அவர்களிடமே கொடுத்து விட்டார் .இப்படி ஒவ்வொரு ஓவியத்திற்கும் ஒரு வரலாறு உள்ளது .

.
பின்னணிப் பாடகர் யேசுதாசுடன்   நல்ல  நட்பு வைத்து இருக்கிறார் இவரது இல்லத்திற்கு  யேசுதாசு அவர்கள் வந்து உணவு அருந்திய படத்தையும் காட்டினார் .குடியரசுத் தலைவர் ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு  தன் ஆசிரியர் படத்தை வரைந்து அனுப்பி உள்ளார். .அவர் பாராட்டி மடல் அனுப்பி உள்ளார் .   

நான் சேதுபதி பள்ளியில் படித்தபோது காவல்துறைக்கு நண்பனாக இருந்து போக்குவரத்து ஒழுங்கு செய்வதை பார்த்து இருக்கிறேன். இரவு நேரங்களில் தொடர்வண்டி நிலையம் சென்று முதியவர்கள் மாற்றுத் திறனாளிகள் தொடர்வண்டியில்  பயணம் செய்ய உதவுவதையும் பார்த்து இருக்கிறேன்  செஞ்சிலுவைச் சங்கத்திலும் இருந்தார் .மிக நல்ல மனிதர் .பண்பாளர் .பல வருடங்களாக அறிவேன். தனது உடலை மதுரை மருத்துவக் கல்லூரிக்கு தானம் தர பதிவு செய்து கொடுத்து உள்ளார் .

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வரும் மிக நல்ல மனிதர் ஓவியர் P.N.  கேசவன் அவர்களை வாழ்த்துங்கள் .அலைபேசி எண்
9940760111. 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்