ஞாபகம் வருதே ! கவிஞர் இரா .இரவி !
ஒன்று முதல் ஐந்து வரை ஆண் பெண்
ஒன்றாகவே படித்தோம் நட்பாய் இருந்தோம் !
ஆசிரியர் ஆசிரியை இருவருமே எங்கள் மீது
அன்பு செலுத்தி கற்பித்து வந்தனர் !
நாங்களும் அவர்களை இரண்டாம் பெற்றோராக
நினைத்து நாளும் கல்வி கற்று வந்தோம் !
குரு சீடர் உறவு என்பது அன்று எங்களுக்கு
குதூகலமாக மகிழ்வாக இருந்து வந்தது !
எல்லோரும் மிக அன்பாகப் பழகி வந்தோம்
எங்களுக்குள் வேற்றுமை இல்லவே இல்லை !
யார் என்ன சாதி என்பது அன்று எங்களில்
யாருக்கும் எதுவும் தெரியவே தெரியாது !
.
வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை
விரும்பிப் பகிர்ந்து உண்டு மகிழ்வோம் !
ஆசிரியர் அடித்தாலும் வாங்கிக் கொள்வோம்
அவரும் மறுகணம் ஆறுதல் சொல்வார் !
பள்ளியின் வாசலில் பாட்டி அன்பாய் விற்கும்
பழங்கள் சோளக்கதிர் வாங்கி உண்போம் !
முதல் மதிப்பெண் வாங்கவில்லை நான்
முழுமனதுடன் பள்ளி சென்று வருவேன் !
பள்ளிக்கு விடுமுறை என்றால் நண்பர்களை
பார்க்க முடியாதே என மனம் வருந்துவேன் !
நடந்து செல்லும் தூரத்தில்தான் பள்ளி
நல்ல தமிழ் வழியே பாடங்கள் பயின்றோம் !
அப்போது எல்லாம் அரசுப்பள்ளி ஆலயம்
அற்புதமாக சொல்லித் தருவர் ஆசிரியர்கள்!
நீதி போதனைக்கு தனி வகுப்பு உண்டு
நீதிக் கதைகள் தினமும் சொல்வார்கள் !
அசைப்போட்டுப் பார்த்தேன் பள்ளிப் பருவத்தை
அனைத்தும் மறக்கவில்லை ஞாபகம் வருதே !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக