தங்கமகன் தங்கவேலு மாரியப்பன் வாழ்க !

தங்கமகன் தங்கவேலு மாரியப்பன்   வாழ்க !
கவிஞர் இரா .இரவி !
 

யார் இந்த தங்கவேலு மாரியப்பன் என்று இன்று
இந்தியா முழுவதும் உலகம் முழுவதும் கேட்கின்றது !

தமிழன் என்று சொல்லடா தங்கவேலு மாரியப்பா
தலை நிமிர்ந்து நில்லடா  தங்கவேலு மாரியப்பா !

மாற்றுத் திறனாளிகள் சமுதாயத்திற்கே
மகுடம் சூட்டி விட்டான் தங்கவேலு மாரியப்பன் !

திடகாத்திரமானவர்களால் வாங்க முடியாத
தங்கப்பதக்கத்தை வாங்கினான் மாரியப்பன் !

ஒலிம்பிக்கியில் தங்கம் கிடைக்காத கவலையை
பாராலிம்பிக்கில் தங்கம் வென்று நீக்கினான் !

தங்கவேலு சரோஜா இணையரின் ஏழைமகன்
தங்கமகன் மாரியப்பன் ஆகி உள்ளான் இன்று !

சேலம் பெரிய வடகம்பட்டி கிராமத்தின் புகழை
சீமை முழுவதும் பரப்பி விட்டான் மாரியப்பன் ! 

பேருந்து விபத்தில் கால் ஒடிந்தபோதும்
போராடி வென்றான் பதக்கம் பெற்றான் !

உயரம் தாண்டும் போட்டியில் வென்றான்
உயரம் சென்றான் உயர்ந்து நின்றான் !

இந்தியாவின் மானம் காத்தான் உண்மை
இந்தியா தங்கம் பெற உதவி நின்றான் !

தங்கமகன் இவன் என்று மாறியப்பனை
தரணியெங்கும் போற்றி மகிழ்கின்றனர் !

உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் அவர்களின்
உதவியால் பயிற்சியால் சாதித்தான் மாரியப்பன் !

பெங்களூரு சத்திய நாராயணா  அவர்களின்
பெரும் பயற்சியால் வென்றான் மாரியப்பன் !

ஏழையாகப் பிறந்து வறுமையில் வாடி வதங்கி
ஏற்றம் பெற்றான் முயற்சி திருவினையாக்கியது !

ஓடி வந்து நீ உயரம் சென்று போது
உயரம்   சென்றது நீ மட்டுமல்ல இந்தியாவும்தான்

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்