நிஜம் தொலைத்த நிழல்கள் !

நிஜம் தொலைத்த நிழல்கள் !
கவிஞர் இரா .இரவி !

அரசனை நம்பி புருசனை
விட்ட கதையாக  இங்கே !

உலகமயத்தை நம்பி பலர்
உள்ளதையும் தொலைத்தோம் !

உணவில் நவீனம் வந்தது
உயிருக்கு உலை வைத்தது !

உடையில் நவீனம் வந்தது
உலகைக் கெடுத்தது !

இருப்பிடத்தில்  நவீனம் வந்தது
இடிந்து தலையில் விழுந்தது !

ஊடகத்தில் நவீனம் வந்தது
ஊருக்குள் வன்முறை வளர்த்தது !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்