முகநூல் தோழி ,எழுத்தாளர் ,கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் சவூதி அரேபியாவில் இருந்து மின் அஞ்சல் வழி அனுப்பிய வாழ்த்து மடல் .!




முகநூல்  தோழி ,எழுத்தாளர் ,கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் சவூதி அரேபியாவில் இருந்து மின் அஞ்சல் வழி அனுப்பிய வாழ்த்து மடல் .!
 
 

.
மதிபிற்குரிய கவிஞர் அவர்களுக்கு,
வணக்கம்.
மனதில் உறுதி இருப்பின் சிகரம் தொடலாம் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களைப் பாராட்டுவதில், பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
ஒரு பல்கலைக்கழகம் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை நூலாக்கியிருக்கிறது என்றால், உங்கள் சாதனைகள்
எவ்வளவு மகத்தானவை !

 உங்கள் நற்பண்புகளை  எண்ணிப் பார்க்கிறேன்; வியப்படைகிறேன்! வாழ்த்துகள்!
பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்திருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்களால், கவியுலகு பெருமை கொள்ளுகிறது
என்றால் அது மிகையாகாது !
தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று, வளர்ந்து ஒரு பல்கலைக்கழகமாகச் செழித்துப் பார் போற்ற வாழவேண்டுமாய் வாழ்த்துகிறேன்!
மேலும் பல நல்ல படைப்புகளை உலகுக்குத் தந்து பேரும், புகழும் பெற வாழ்த்துகிறேன்!

வாழ்த்துகளுடன்,
விஜிமா.   

viji.masi@gmail.com



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்