http://www.dinamani.com/specials/kavithaimani
முகப்பு ஸ்பெஷல்ஸ் கவிதைமணி
தண்ணீருக்கு இரத்தம்: கவிஞர் இரா .இரவி
By கவிதைமணி | Last Updated on : 19th September 2016 05:29 PM | அ+அ அ- |
...
தண்ணீருக்கு இரத்தம்: கவிஞர் இரா .இரவி
By கவிதைமணி | Last Updated on : 19th September 2016 05:29 PM | அ+அ அ- |
...
இமயம் முதல் குமரி வரை இந்தியா என்றும்
இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தோர் என்றும் !
இன்றும் நாம் பாடநூலில் குழந்தைகளுக்கு
இனிமையாக கற்பித்து வருகிறோம் !
பல நாடுகள் சண்டையின்றி அமைதியாக
பாயும் நதியைப் பங்குபோட்டு கொள்கின்றனர் !
ஒரே நாட்டில் இரு மாநில பகிர்வில் சண்டை
ஓயாத சண்டை தீர்ப்பை மதிக்காது சண்டை !
மனிதநேயம் மனதில் இருந்தால் என்றும்
மனிதன் ஒருவருக்கொருவர் சண்டையிட மாட்டான் !
மனிதன் விலங்கில் இருந்து வந்தவன் என்பதற்காக
மனிதன் மிருகமாக மாறுதல் முறையோ ?
பொது சொத்துக்களை தனியார் சொத்துக்களை
பொது இடத்தில எரித்து அழிப்பது முறையோ ?
மனிதனுக்கு அழகு பகுத்தறிவைப் பயன்படுத்துவது
மனிதன் சிந்திக்காமல் செயல்படுவது முறையோ ?
யாரும் யாரையும் தாக்குவது என்பது மடமை
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது நம் உடைமை !
மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும்
மனிதனை அடிப்பது விடுத்து யோசிக்க வேண்டும் !
விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை
கெட்டுப் போவோர் விட்டுக் கொடுப்பதில்லை !
தண்ணீருக்கு இரத்தம் சிந்துவது முறையோ ?
தனிமையில் யோசித்தால் கிடைக்கும் விடை !

கருத்துகள்
கருத்துரையிடுக