சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து மதுரைக்கு உலக அளவில் புகழ் சேர்த்த எம் .எஸ் .சுப்புலட்சுமி அவர்களின் நூற்றாண்டு விழா மதுரையில் நடந்தது ! படங்கள் கவிஞர் இரா .இரவி !



சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து மதுரைக்கு உலக அளவில் புகழ் சேர்த்த எம் .எஸ் .சுப்புலட்சுமி அவர்களின்
நூற்றாண்டு விழா மதுரையில் நடந்தது ! படங்கள் கவிஞர் இரா .இரவி !இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு !

உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !


மதுரையில் பிறந்து மதுரைக்குப் புகழ் சேர்த்தவர் !
மதுரமான பாடல்கள் பாடி ரசிகர்களைக் கவர்ந்தவர் !

சண்முகவடிவு அம்மா பெற்றெடுத்த இசைவடிவு !
சுப்பிரமணியம் அப்பா வார்த்தெடுத்த இசைபொழிவு !

எட்டு வயதிலேயே பாட்டுலகில் எட்டு வைத்து !
எட்டாத உயரம் பாட்டால் சென்று வென்றவர் !     

பாமரர் முதல் பண்டிதர் வரை ரசிக்கும் குரல் !
பாடிய பாட்டால் பலரின் சிந்தை ஈர்த்தவர் !

பண்டிதர் நேரு பாராட்டி மகிழ்ந்த இனிய குரல் !
பண்பாளார் கலாம் பாராட்டிய  இனிமைக்  குரல் !

உடல் நலம் குன்றி விருது வாங்க வராத போது !
ஒப்பற்ற கலாமே இல்லம் சென்று வழங்கினார் !

அம்மாவிற்கு அடுத்தபடியாக கலாம் அய்யா !
அன்பாக மதித்திட்ட தாயுள்ளம் இசையரசி !    

தேசம் மட்டுமல்ல உலகமே விரும்பியது காந்தியடிகளை !
தேசப்பிதா மிகவும் விரும்பியது இசைகுயிலின் குரலை !

இசைப் பேரறிஞர் விருது பெற்று விட்ட போதும் !
என்றும் தலைக்கனம் செருக்கில்லாத எளிமை !

யாருக்கும் தீங்கு மனதாலும் நினைக்காதவர் !
யாவரும் போற்றிப் பாராட்டும் பெண்மையின் சிகரம் !

காற்றினிலே  வரும் கீதம் பாடலை நாம் !
கண்களை முடி கேட்டால் உலகை மறப்போம் !

அலைபேசி அழைப்பில் ஒலிக்கும் உன்னதப்பாடல்!
அம்மா படிய குறையொன்றுமில்லை என்ற பாடல் !

ஈட்டிய வருமானத்தை கர்ணனைப் போலவே !
ஈந்து மகிழ்ந்த ஈகை உள்ளம் தாயுள்ளம் !

மதுரைக்கு மங்காத புகழ் கிடைக்கக் காரணம் !
மீனாட்சியம்மன் கோயில் மட்டுமல்ல இசைக்குயிலும்தான் !

உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் !
உம் பாடல் ஒலிக்கும் வரை உம் புகழ் நிலைக்கும்  !  































கருத்துகள்