நன்றி . தினமணி .கவிதைமணி.

http://www.dinamani.com/kavithaimani/2016/08/15/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-/article3580847.ece

-- 
முகப்பு > கவிதைமணி
எல்லைக்கோடு ! கவிஞர் இரா .இரவி !
By dn
First Published : 15 August 2016 01:08 PM IST



பறவைக்கு இல்லை என்றும் எல்லைக்கோடு
பரந்து விரிந்து பறந்து வரும் பறவை !

மனிதர்கள்தான் வகுத்துள்ளனர் எல்லைக்கோடு
மனிதர்களை எல்லை தாண்டியதாய் கைது !

கடலுக்குள் ஏதடா எல்லை இது புரியாமல்
கைது செய்து மகிழ்கிறான் சிங்களன் !

வயிறுப் பிழைப்பிற்கு வரும் மீனவர்களை
வயிற்றில் அடித்து வலைகளைப் பிடுங்குகின்றான் !

வேகமாய் ஒரு அலை அடித்தால் படகு
விரைவாய் கடந்துவிடும் போலி எல்லைக்கோட்டை !

விரைவாய் ஒரு காற்று வீசினால் படகு
வேகமாய் கடந்துவிடும் போலி எல்லைக்கோட்டை !

இதனைக் குற்றமென்று கைது செய்கிறான்
இவர்களைச் சிறைப் பிடித்து மகிழ்கிறான் !

கடலில் நீ வகுத்துள்ள எல்லைக்கோட்டுக்கு
கட்டி இருக்கிறாயா இரும்புக் கோட்டை?

தானம் தந்த கச்சத்தீவில் தமிழக மீனவர்கள்
தெரிந்தால் சுட்டு விடுகிறான் !

வலை உலர்த்திட அனுமதி இருந்தபோதும்
வலை வைத்திட விடுவதேயில்லை !

கச்சத்தீவைத் திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது
கொட்டம் அடக்க அதுதான் தீர்வாக உள்ளது !

பறவைக்கு உள்ள சுதந்திரம் கூட
பகுத்தறிவு பெற்ற மனிதனுக்கு இல்லை !

விலங்குகளுக்கு உள்ள நேயம் கூட
விவேக மனிதனுக்கு இல்லை !

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று
யாவருக்கும் சொன்னவனுக்கா எல்லைக்கோடு !
.


நன்றி

கருத்துகள்