வயல்வெளிகளில்: கவிஞர் இரா .இரவி
நன்றி .தினமணி கவிதைமணி !
பணம் வருகின்றது என்பதற்காக வயல்களை
பகுதியாகப் பிரிந்து வீட்டடிமனைகளாக்குகின்றனர் !
அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்றனர்
அளவின்றி வீட்டடிமனைகளைப் பெருக்கி வருகின்றனர் !
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயமென்றார் காந்தியடிகள்
இந்தியாவின் முதுகெலும்பை நாளும் முறித்து வருகின்றனர் !
உழவு என்பது மிக உன்னதம் உரைத்தார் திருவள்ளுவர்
உணரவில்லை நம்மவர் பிளக்கின்றனர் நிலத்தை !
உழவனுக்கு ஆசைக்காட்டி மோசம் செய்கின்றனர்
உழவுக்கு மூடுவிழா நாளும் நடத்தி மகிழ்கின்றனர் !
ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய நாடு இன்று
இறக்குமதியில் செல்வங்களை இழந்து வருகின்றது !
.விவசாய நிலங்களை வீட்டடிமனைகளாக்கும்
விவேகமற்ற செயலுக்கு உடன் முடிவு கட்டுங்கள் !
தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்கள் வேண்டாம்
நன்மை தரும் நமது இளநீர் பருகி மகிழ்வோம் !
தீமை தரும் பீசா பர்கர் வேண்டாம் நமக்கு
நன்மை தரும் சிறுதானியங்கள் உண்போம் !
துரித உணவு துரித சாவைத் தரும் அறிந்திடுக
அரிய உணவான கம்பு கேழ்வரகு உண்போம் !
உணவில் நாகரிகம் என்று வந்தவைகள்
உழவனுக்கும் நம் உடலுக்கும் கேடு தருபவை !
உடையில் நாகரிகம் என்று வந்தவைகள்
உழவனுக்கும் நமக்கும் கேடு தருபவை !
வயல்வெளிகளில் பயிர்களை வளர்ப்போம்
வீட்டடி மனைகளாக்கும் மடமை ஒழிப்போம் !

கருத்துகள்
கருத்துரையிடுக