பேராசிரியர் தம்பதிகள் வாழ்கவளமுடன்
திருமணநாள் வாழ்த்து
நற்றமிழால் இணைந்துநிற்கும் நயமுடைய தம்பதிகாள்
சொற்றமிழால் வாழ்த்துகின்றோம் சுகமுடனே வாழ்ந்திடுக
வற்றாத செல்வமொடு வளமோடு வாழ்கவென்று
மனமார வாழ்த்துகிறோம் வாழ்ந்திடுக பல்லாண்டு !
புன்சிரிப்புத் தவளும்முகம் புத்துணர்வு மிக்கவுளம்
அன்புநிறை தம்பதியாய் அறிவுகொண்டு வாழும்நிலை
எல்லாமே எம்மனத்தில் இருக்கின்ற காரணத்தால்
என்னாளும் வாழ்த்துவதில் இன்பமே எய்துகின்றோம் !
இலக்கியத் தம்பதியாய் இணைந்தவுங்கள் இல்வாழ்க்கை
ஈரிருபது வருடம் எப்படித்தான் ஓடியதோ
இன்றுநாம் பார்பதற்கும் இளமையாய் இருக்கும்நீங்கள்
என்றுமே இளமையுடன் இருந்துவிட வாழ்த்துகின்றோம் !
அன்புடன் வாழ்த்துபவர்கள் மெல்பேண்
ஶ்ரீ ஜெயராமசர்மா அவுஸ்த்திரேலியா
ஶ்ரீமதி சாந்தி ஜெயராமசர்மா
.

கருத்துகள்
கருத்துரையிடுக