சிந்தாமல் தந்த ரத்தம் சித்தம் ! கவிஞர் இரா .இரவி !

சிந்தாமல் தந்த ரத்தம் சித்தம் !    கவிஞர் இரா .இரவி  !

ரத்தம் கிடைக்காமல் இறந்த உயிர்கள் பல உண்டு 
ரத்தம் கிடைத்ததால் பிழைத்த உயிர்கள் பல உண்டு !

மனிதநேயத்தின் அடையாளம் ரத்ததானம் 
மனிதனாகப் பிறந்ததன் அடையாளம் ரத்ததானம் !

சாதி மத பேதமின்றி அனைவரிடமும் 
சகோதரத்துவம் வளர்ப்பது ரத்ததானம் !

தொண்டில் சிறந்ந்த தொண்டு ரத்ததானம் 
தியாகத்தில் சிறந்த தியாகம் ரத்ததானம் !

பொதுநலம் மட்டுமல்ல  ரத்ததானம் 
தன்னலமும் காப்பதுதான்  ரத்ததானம் !

புதியரத்தம்  ஊற வழி வகுக்கும் ரத்ததானம் 
புத்துயிர் தந்து புத்துணர்வு தரும் ரத்ததானம் !

மனமகிழ்ச்சி வழங்கிடும்  ரத்ததானம் 
மனதார வழங்கும் தானம் ரத்ததானம் !

பிறந்ததன் பயனை அடைந்திட ரத்ததானம் 
பிறப்பின் அர்த்தம் விளங்கிட ரத்ததானம் !

அச்சமின்றி வழங்கலாம் ரத்ததானம் 
அடுத்து உடனே ஊறிவிடும் ரத்ததானம் !

தானத்தில்   சிறந்த தானம் ரத்ததானம் 
தரணியில் உயிர்கள் வாழ உதவும் ரத்ததானம் !

விபத்தில் காயம் அடைந்தோருக்கு உதவும் ரத்ததானம் 
வினோத நோயால் பாதித்தோருக்கு  உதவும் ரத்ததானம் !

இறப்பின்  வாசல் எட்டியவர்களை மீட்பது ரத்ததானம் 
ஏழைகளின் உயிர் காப்பது உயர்ந்த  ரத்ததானம் !

சக மனிதனை நேசிக்க உதவும்  ரத்ததானம் 
சக மனிதனை சாதிக்க வைக்கும்  ரத்ததானம் !

வாழ்வின் முழுமை உணர்த்துவது  ரத்ததானம் 
வாழ்க்கையின் அர்த்தம் விளக்குவது  ரத்ததானம் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்