பாடகர் திருவுடையான் ! கவிஞர் இரா .இரவி !

பாடகர் திருவுடையான் ! கவிஞர் இரா .இரவி !

பெயரிலேயே திரு உடைய திருவுடையான்
பாட்டாலே உள்ளம் கொள்ளை கொண்டவன் !

மதுரை புத்தகத்த திருவிழாவில் வருடாவருடம் 
மதுர கானம் இசைத்திட்ட இனியவன் !

வெண்கலக் குரலால் ஓங்கி ஒலித்து
வெள்ளமென பாடல்கள் வடித்தவன் ! 

சொந்தமாகவே இயற்றி பல பாடல்கள் 
சொந்தக்குரலில் இசைத்திட்ட இசைக்  கலைஞன் !

உணர்ச்சிக்  கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகளை 
உணர்ச்சியோடு  உச்சரித்துப் பாடியவன் !

தமிழா நீ பேசுவது தமிழா என்ற பாடலை 
தரணியில் உனக்கு நிகராக வேறு யாரும் பாடவில்லை !

த.மு.எ.க .ச   காலை  இரவு நிகழ்வுகளில் 
தவறாமல் வந்து இருந்து பாடியவன் !

செந்தூரன் இல்லத்  திருமண வரவேற்பில் நீ 
செந்தமிழால் பாடல்கள் இசைத்து மகிழ்வித்தாய் !

இயற்றுவது பாடுவது இசைப்பது வரைவது என
எண்ணிலடங்காத திறமைகள் பெற்ற பெருமகன்  !

கர்வம் ஏதுமின்றி எல்லோரிடமும் மிகமிக 
கண்ணியமாகவும் எளிமையாகவும் இருந்த எளியன் !

தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டியை  
தன்னம்பிக்கையுடன் என்றும் அணிந்து வாழ்ந்தவன் !

நெசவாளர் குடும்பத்தில் பிறந்த எளியவன் 
நாளும் பாடல் நெசவு செய்து மகிழ்வித்தவன் !

கொண்ட பொதுவுடைமைக்  கொள்கையில் 
குன்றென இறுதிவரை உறுதியாக நின்றவன் !

குமுகாய  விழிக்க தொடர்ந்து மேடைகளில் 
குரல் கொடுத்து பாடிய நல்ல பாடகன் ! 

சாவே உனக்கு ஒரு சாவு வராதா என 
சபிக்க வைத்தது உந்தன் அகால மறைவு !

உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும் 
பாடலால் என்றும்  வாழ்வாய் மரணமில்லை !




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்