மானம் காத்த மங்கை சாக்க்ஷி மாலிக் வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

மானம் காத்த மங்கை சாக்க்ஷி மாலிக்  வாழ்க ! கவிஞர் இரா .இரவி !


இந்தியாவின் மானம் காத்த மகள் வாழ்க 
இந்தியாவின் பெயரை பட்டியலில் சேர்த்த நல்லாள் !

மல்யுத்தம் செய்து எதிரியை வீழ்த்தி 
மானம் காத்து பதக்கம் பெற்றாள் ! 
 
நூற்றி இருபத்தி ஐந்து கோடி மக்கள் உள்ள 
நாடு பதக்கம் பெறாவிடில் நாட்டுக்கு  இழுக்கு !

இந்தியாவின் பெயர் பதக்கப் பட்டியலில் 
இல்லாமல் போகுமோ என்ற கவலை தீர்த்தாள் !

ஹரியானாவில் பிறந்த பெண் இனத்தின் பிரதிநிதி 
கடுமையாகப் போராடி வெண்கலப் பதக்கம் வென்றாள் !

மெல்லினம் அல்ல பெண்கள் வல்லினம் என்று 
மெய்ப்பித்து ஒற்றைப் பெண்ணாய் ஒலிம்பிக்கில் சாதித்தாள் !

ஆணாதிக்கம் தகர்த்தாள் ஒரே ஒரு பதக்கத்தால் 
ஆணை விட பெண்ணே திறமையானவள் உணர்த்தினாள் !

எதிர்ப்பார்த்தவர்கள் எல்லாம் ஏமாற்றி விட்டார்கள் 
எதிர்பார்க்காத அவளே இந்தியாவிற்கு ஏற்றம் தந்தாள் !

கேலி  கிண்டலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்
கேள்விப்பட்ட அனைவருக்கும் மகிழ்வைத் தந்தாள் !  
 
ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றாள்
ஓயாத பயிற்சியே  அவளை உயர்த்தியது ! 

இனியாவது பெண்களை அனைவரும் மதித்து நடப்போம் 
இனியவர்களின் திறமை வெளிப்பட வாய்ப்பளிப்போம்!

மறக்க முடியாத வரலாற்று சாதனை நிகழ்த்திய 
மானம் காத்த மங்கை சாக்க்ஷி மாலிக்  வாழ்க !   

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்