வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி !
நீரின்றி அமையாது உலகு உரைத்தார் திருவள்ளுவர்
நீயின்றி அமையாது என் வாழ்வு என்பேன் நான் !
வானிலிருந்து வரும் அமுதம் மழை என்றார்
வஞ்சி நீ என்னை வாழ்விக்கும் அமுதம் என்பேன் !
மூன்று பக்கம் கடலால் சூழ்ந்தது இந்தியா
முழுவதுமே உன்னால் சூழப்பட்டவன் நான் !
வான்மழை பொய்த்தால் பூமி வாடி வதங்கிவிடும்
வடிவழகி உன் பார்வை பொய்த்தால் நான் வாடிடுவேன் !
மண்ணில் பயிர்கள் வளர்ந்திட வேண்டும் வான்மழை
மண்ணில் நான் வாழ்ந்திட வேண்டும் உன் பார்வைமழை !
மழை பொய்த்தால் எங்கும் வறட்சி வந்துவிடும்
மங்கை நீ வராது பொய்த்தால் மனக்கவலை வந்துவிடும் !
நல்ல மழை பொழிந்தால் உள்ளவர்கள் மகிழ்வார்கள்
நங்கை உன் பார்வை மழை பொழிந்தால் மகிழ்வேன் நான் !
மழை பெய்தால் நீர் நிலைகள் நிரம்பி வழியும்
மங்கை நீ வந்தால் மகிழ்வில் பொங்கிடுவேன் நான் !
உழவர்கள் உயர்வாக எண்ணுவது வான்மழையை
உன்னை உயரவாக என்றும் எண்ணுவது என் நிலையே !
' மாமழை போற்றுதும் 'என்பார்கள் இலக்கியத்தில்
'மங்கை உன்னைப் போற்றுதும்' என்பேன் நான் !
கண்கள் இரண்டு போதாது கள்ளி உன்னை ரசிக்க !
மழை பொழிந்திட மரங்கள் வளர்க்க வேண்டும்
மங்கை நீ மகிழ்ந்திட அன்பை விதைக்க வேண்டும் !
வளம் செழிக்க பூமிக்குத் தேவை வான்மழை
வஞ்சி நீ என்னை செழிக்க வைக்கும் பூமி மழை !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக