மதுரை இலக்கிய பேரவையின் தலைவர் திரு .சண்முக திருக்குமரன் தந்த தலைப்பு ! சுதந்திர வேர்களைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !
மதுரை இலக்கிய பேரவையின் தலைவர்
திரு .சண்முக திருக்குமரன் தந்த தலைப்பு !
சுதந்திர வேர்களைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kav ignar-eraravi
திரு .சண்முக திருக்குமரன் தந்த தலைப்பு !
சுதந்திர வேர்களைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !
சுதந்திர வேர்களைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !
விழுது விட்ட பெரிய ஆலமரங்களை
விழாமல் காப்பது அதன் வேர்களே !
இன்பமான விடுதலையைப் பெற்றுத் தந்தது
இன்னுயிர் ஈந்து வழங்கிய முன்னோர்கள் !
காந்தியடிகள் அகிம்சை வழி மாறாமல்
காலமெல்லாம் போராடிப் பெற்றுத் தந்தார் !
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்
நாடு முழுவதும் படைகள் திரட்டி போராடினார் !
வ .உ .சிதம்பரம் செக்கிழுத்து கப்பலோட்டி
வாங்க உதவினார் மக்களுக்கு விடுதலையை !
மகாகவி பாரதியார் விடுதலை குறித்து
மகத்தான பாடல்கள் பாடி உதவினார் !
தில்லையாடி வள்ளியம்மை கடுங்காவல் பெற்று
தியாகம் செய்து உயிர் நீத்து உதவினார் !
கொடி காத்த குமரன் கொடிக்காகவே வெள்ளையனிடம்
கடுமையாக அடி வாங்கி விடுதலைக்கு உதவினார் !
சும்மா கிடைக்கவில்லை இனிய விடுதலை
சோகங்கள் துயரங்கள் பெற்றுப் பெற்றனர் !
எண்ணற்றவர்கள் இனிய தியாகத்தால்
எமக்கு வந்தது விடுதலை வணங்குகின்றோம் !
குரங்கு கையில் கிடைத்த பூமாலை என
கொடுமையானவர்களிடம் சிக்கியது நாடு !
பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டி உயர்த்தி
பாவம் உழவர்கள் வயிற்றில் அடிக்கும் ஆந்திரம் !
கடவுளை வணங்கிட திருப்பதி செல்லும் அப்பாவிகளை
கட்டை கடத்த வந்தவர்கள் என்று சிறை ஆந்திராவில் !
காவிரியில் கரை புரண்டு தண்ணீர் ஓடினாலும்
கல்நெஞ்சம் கொடு தர மறுக்கும் கர்நாடகம் !
பெரியாறு அணை உடையுமென்று பீதி கிளப்பி
பெரிய அளவில் நீர் தேக்கவிடாத கேரளம் !
அண்டை மாநிலங்கள் மட்டுமல்ல தமிழகத்தை
அண்டை நாடு இலங்கையும் வஞ்சித்து வருகின்றது !
காக்கை குருவி சுடுவது போலவே இலங்கை
கண்ணில் பட்ட மீனவர்களைச் சுட்டு மகிழ்கின்றது !
அடைந்திட்ட விடுதலையை அடைய விடாமல்
அண்டையில் இருப்போர் தடுப்பது முறையோ ?
போராட்டிப் பெற்ற விடுதலையின் பயனை
பூரணமாக மக்களை துய்க்க விடுவதில்லை !
வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல்வாதிகள்
வாயில் வந்ததைப் பேசி ஏமாற்றி வருகின்றனர் !
விடுதலையின் நன்மையை அடையவிடாது
வஞ்சிப்பதை நிறுத்துங்கள் வேர்கள் மகிழும் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kav
கருத்துகள்
கருத்துரையிடுக