அட்டைப்படத்திற்கு கவிதை .நன்றி பாக்யா வார இதழ் ! கவிஞர் இரா .இரவி !

அட்டைப்படத்திற்கு கவிதை .நன்றி பாக்யா  வார இதழ் !

கவிஞர் இரா .இரவி !

தலைமீது அமர்ந்த போதும் 
பாரம் தெரியவில்லை 
பாவை என்பதால் !
------------------------
தலையில் கணம் இருந்தால் 
வாழ்க்கையில் 
வீழ்ச்சி உறுதி !
-------------------------
மூளையின் ஒரு மூலையில்
நிரந்தரமாய் இருக்கிறாள் 
காதலி !
------------------------
ஆணைவிட பெண்ணே  மேல் 
என்பதை இப்படியா 
உணர்த்துவாய் ?
-------------------------
ஆணின் சிரம் 
பெண்ணின் இருக்கையானது 
சோகத்தில் ஆண் !
-------------------
அன்று கூடையில் 
சுமந்த சென்றவள் 
இன்று பழி தீர்க்கிறாள் !

  

கருத்துகள்