பெங்களூருத் தமிழ்ச் சங்கம் திங்கள் தோறும் நடத்தும் 278 ஆம் ஏரிக்கரை கவியரங்கம் !

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் திங்கள் தோறும் நடத்தும் 278 ஆம் ஏரிக்கரை கவியரங்கம் !

28.8.2016 அன்று மதியம் 3.30 மணிக்கு பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் கவியரங்கம் தொடங்கியது .பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தின் செயலர் ஸ்ரீதரன் கவியரங்கைத் தொடங்கி வைத்தார் .. கவியரங்க  பொறுப்பாளர்கள்  பேராசிரியர் சு .கோவிந்தராசன் முன்னிலை உரையாற்றினார்.கவிஞர் அமுதபாண்டியன் அறிமுக உரையாற்றினார்.கவிஞர் கொ.சி .சேகர்  நன்றி  கூறினார் .

கவிஞர் இரா .இரவி தலைமையில்  கவியரங்கம் நடந்தது. பெங்களூரு வாழ் புகழ் பெற்ற மரபுக் கவிஞர்கள் புதுமைக்கு கோமான் ,இராம இளங்கோவன் ,சு .முத்துச்சாமி ,ரமேசு ,மூர்த்தி, கார்த்தி ,நம்பி ராஜன் ,தனம் .வேளாங்கண்ணி ,புண்ணிய மூர்த்தி, சேகர் ,கல்யாண் குமார் ,வீணை தேவி உள்ளிட்ட பலர் "எழுந்து நிற்க எழுது "என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்கள் .

திருவாளர்கள் ராசு ,அன்புநிதி ,மலர்மன்ன ,ரசனி முருகன்  ,திருமதி ஜெயா உள்ளிட்ட பலர் கவியரங்கில் சுவைஞர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் .






கருத்துகள்