ஆடி தள்ளுபடி ரகசியம் ! கவிஞர் இரா .இரவி !

ஆடி தள்ளுபடி ரகசியம் ! கவிஞர் இரா .இரவி !

ஆடி மாதத்தில் உழவர்கள்" ஆடி பட்டம் தேடி விதை" என்று விவசாயத்தில் கவனமாக இருக்கும் மாதம் .எனவே ஆடிமாதத்தில் துணிக்கடைக்கோ ,நகைக்கடைக்கோ செல்வது இல்லை .அந்த மாதத்தில் திருமணம்
செய்வதில்லை. காரணம் ஆடியில் கரு தரித்தால் சித்திரையில் பிரசவம் என்பது கர்பிணிப் பெண்ணிற்கு சிரமம் .வீடு மாறும் வேலையும் செய்வதில்லை .ஆடி மாதம் முழுவதும் விவசாயத்தில் கண்ணும்  கருத்துமாக இருப்பது வழக்கம் .

ஆடி மாதம் வியாபாரம் மந்தமாக இருப்பதால் மக்களை கடைகளுக்கு வரவழைக்க,உண்மையான   விலையிலேயே பல சதவிகிதம் உயர்த்தி  வைத்து, தள்ளுபடி என்று அறிவித்து மக்களை வரவழைத்து வியாபாரிகள் ஏமாற்றி வருகின்றனர் . விற்காத  கழிவுகளையும் தள்ளுபடி என்ற பெயரில் விற்று விடுகின்றனர் .

மக்களே விழிப்புணர்வோடு இருங்கள் .50 சதவிகிதம் தள்ளுபடி எப்படித் தர முடியும் சிந்தித்துப் பாருங்கள் .50 சதவிகிதம் விலையை ஏற்றி வைத்து 50 சதவிகிதம் தள்ளுபடி தருகின்றனர் .

கருத்துகள்