காகிதங்கள் ! கவிஞர் இரா .இரவி !
எழுதவும் படிக்கவும் மட்டுமல்ல இன்று
எத்தனையோ பயன்பாட்டில் காகிதங்கள் !
தேநீர் பருகவும் தன்னுயிர் குடிக்கவும்
தட்டாக உணவு உண்ணவும் காகிதங்கள் !
சுற்றுச்சுழல் கேடுதரும் நெகிழிக்கு மாற்றாக
சுழற்சிக்குப் பயன்படும் ஒப்பற்ற காகிதங்கள் !
காதலர்கள் கடிதம் வரைய உதவியது
கவிஞர்கள் கவிதை எழுத உதவுகின்றது !
காகிதங்கள் எகிப்து நாட்டில் முதலில்
கி .மு .3500 இல் கண்டுபிடித்தார்கள் !
இந்தியாவின் அருகே உள்ள சீனர்கள்
இரண்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தினர் !
பப்பிரஸ் என்ற தாவரத்தில் இருந்து
படிக்க உதவும் காகிதம் தயாரித்தனர் !
தமிழர்களின் முந்தைய காகிதம் பனைஓலை
தன்னிகரில்லா திருக்குறள் எழுதப்பட்டது பனைஓலை !
படித்துவிட்டனர் உற்பத்தித்திறனை தமிழர்கள் !
உலக அளவில் உயர்ந்த காகிதங்கள்
உலக நாடுகள் ஐம்பதுக்கு மேல் ஏற்றுமதி !
தமிழ்நாடு காகித உற்பத்தி நிறுவனம்
தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்றானது !
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்திநான்கில் தொடங்கி
அசுரவளர்ச்சி அடைந்து பிரமிப்பில் ஆழ்த்துகிறது !
தொழிற்சசாலைக் கழிவுகள் மேலாண்மையில்
தன்னிகரில்லா தேசிய விருது பெற்றது !
காகிதம் மட்டுமல்ல மின்சாரமும் உற்பத்தி
காகிதத்தின் தரத்தைத் தரமாகவே வைத்துள்ளனர் !
டி. என் .பி .எல் . என்றால் சிறந்த காகிதங்கள்
சிறந்த காகிதங்கள் என்றால் டி. என் .பி .எல் . !
அலைபேசி கணினி தொலைக்காட்சி என்று
ஆயிரம் வந்தாலும் புத்தகசுகம் கிடைப்பதில்லை !
காகிதத்தில் உள்ள எழுத்துக்களை வாசிப்பது
குழந்தைகளின் சிரிப்புப் போல இனிமையானது !
மனிதகுல வளர்ச்சிக்கு வித்திட்டது காகிதங்கள்
மனிதனை மனிதனாக ஆக்கியது காகிதங்கள் !
மனதோடு பேசி மகிழ்விக்கும் காகிதங்கள்
மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு காகிதங்கள் !
கருத்துகள்
கருத்துரையிடுக