ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

செலவில்லாதது 
குழந்தைகள் வண்டி 
நுங்கு வண்டி !

யானை போன்று 
ஆயிரம் போன் 
பனைமரம் ! 

பூ காய் இலை 
முழுவதும் பயன்படும் 
முருங்கைமரம் !

நோய் நீக்கும் 
நலம் தரும் 
வேப்பமரம் !

ஆயிரம் காலத்து 
மரம் 
தேக்கு !

சண்டைமாநிலங்களாகின 
அண்டை மாநிலங்கள் 
தமிழகத்திற்கு அநீதி !

ஆடம்பரக் கல்வியானது 
ஆரம்பக்கல்வி 
தனியார் பள்ளிகள்  !

ஏளனமாய் நினைத்தவர்கள்
ஏமாந்துபோனார்கள் 
அரசுப்பள்ளிகளின்  சாதனை  

நனவாகாது 
உழைப்பற்ற 
வெறும் கனவு  !

வந்துசேரவில்லை 
பயன்பட்டது  அரசியலுக்கு 
கருப்புப்பணம்!

உலகில் 
மிகவும் மலிவானது 
தமிழன் உயிர்  !

அறநெறி மீது 
கற்பிக்கின்றன அவநம்பிக்கை
நாட்டு நடப்பு !
.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
Attachments area

கருத்துகள்