பாக்யா அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

பாக்யா அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

அதற்குள் அவளுக்கு நரையா ?
அவளை உற்று நோக்கியதும் தெரிந்தது ! 
கூந்தல் அல்ல அருவி என்பது !

கண்கள்  வழி கவிதைக் கொட்டும் 
கன்னிப்பெண் இடப்புறம் !
குன்றிலிருந்து கொட்டும் அருவியோ 
குமரியின் தலையிலிருந்து வலப்புறம்  !

குளித்து முடித்து குமரி 
கொள்ளையடிக்கிறாள் உள்ளதை !
குளிக்கும் குமரியோ 
கவனம் ஈர்க்கிறாள் !

கருங்கூந்தல்  வெண்மை அருவியானது 
தொழில் நுட்பத்தின் நுட்பத்தால் !

அமர்ந்தாலும் அழகு 
நின்றாலும் அழகு 
நடந்தாலும் அழகு 
மொத்தத்தில் அழகோ அழகு  ! 
-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்