படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! . ஜூலை-10. வேலூர் சிப்பாய் எழுச்சி. கவிஞர் ப.கண்ணன்சேகர், திமிரி.
.
ஜூலை-10. வேலூர் சிப்பாய் எழுச்சி.
ஜூலை-10. வேலூர் சிப்பாய் எழுச்சி.
கவிஞர் ப.கண்ணன்சேகர், திமிரி. செல் : 9894976159.
வெள்ளையர் ஆட்சியின் வெறித்தனம் நீக்கிட
வேலூரில் சிப்பாய்கள் வெகுண்டனர் எழுச்சியாய்!
கொள்ளையர் கூடாரம் கோட்டையில் தகர்த்திட
கொடுமைக்கு எதிராக கொதித்தது புரட்சியாய் !
முள்ளோடு செடியென முளைத்திட்ட ஆதிக்கம்
முழுமையாய் அகற்றிட முனைந்தனர் முயற்சியாய்!
துள்ளிடும் புழுக்களை துடைத்தே எறிந்திட
துடித்த படைகளும் தொடங்கினர் கிளர்ச்சியாய்!
அடிமையின் விலங்கினை அகற்றிடும் எழுச்சியை
அன்றே செய்தனர் ஆரம்ப போராட்டம்!
வடித்திடும் கண்ணீரின் வலியினைப் போக்கிட
வெள்ளையின் ஆதிக்கம் வேரருக்க போராட்டம்!
மடிந்திடும் உயிர்களின் மரணத்தை மாற்றிட
மாறாத உணர்வென மனங்களின் போராட்டம்!
கொடியவர் சூழ்ச்சியை குலைத்திட செய்தனர்
கோட்டையின் நகரிலே கொடுஞ்சிறை போராட்டம்!
பன்பாட்டை மாற்றிட பணித்தனர் வெள்ளையர்
படைகளும் கிளர்ந்தே பாய்ந்திட கண்டனர்!
தென்நாட்டின் கலாச்சாரம் திருத்திட யாரென
திடமாக கேள்வியை தெரித்தனர் படையினர்!
தன்னல நோக்கோடு தரங்கெட்ட ஆங்கிலேயர்
தாக்கிட படைகளும் தாளாமல் மாண்டனர்!
வன்முறை ஆட்சியை வேரருக்க செய்திட
வேலூரின் எழுச்சியால் விடுதலை தூண்டினர்!
-
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/ kavignar-eraravi
வெள்ளையர் ஆட்சியின் வெறித்தனம் நீக்கிட
வேலூரில் சிப்பாய்கள் வெகுண்டனர் எழுச்சியாய்!
கொள்ளையர் கூடாரம் கோட்டையில் தகர்த்திட
கொடுமைக்கு எதிராக கொதித்தது புரட்சியாய் !
முள்ளோடு செடியென முளைத்திட்ட ஆதிக்கம்
முழுமையாய் அகற்றிட முனைந்தனர் முயற்சியாய்!
துள்ளிடும் புழுக்களை துடைத்தே எறிந்திட
துடித்த படைகளும் தொடங்கினர் கிளர்ச்சியாய்!
அடிமையின் விலங்கினை அகற்றிடும் எழுச்சியை
அன்றே செய்தனர் ஆரம்ப போராட்டம்!
வடித்திடும் கண்ணீரின் வலியினைப் போக்கிட
வெள்ளையின் ஆதிக்கம் வேரருக்க போராட்டம்!
மடிந்திடும் உயிர்களின் மரணத்தை மாற்றிட
மாறாத உணர்வென மனங்களின் போராட்டம்!
கொடியவர் சூழ்ச்சியை குலைத்திட செய்தனர்
கோட்டையின் நகரிலே கொடுஞ்சிறை போராட்டம்!
பன்பாட்டை மாற்றிட பணித்தனர் வெள்ளையர்
படைகளும் கிளர்ந்தே பாய்ந்திட கண்டனர்!
தென்நாட்டின் கலாச்சாரம் திருத்திட யாரென
திடமாக கேள்வியை தெரித்தனர் படையினர்!
தன்னல நோக்கோடு தரங்கெட்ட ஆங்கிலேயர்
தாக்கிட படைகளும் தாளாமல் மாண்டனர்!
வன்முறை ஆட்சியை வேரருக்க செய்திட
வேலூரின் எழுச்சியால் விடுதலை தூண்டினர்!
-
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக