நன்றி பாக்யா வார இதழ் ! படத்திற்கு கவிதை !கவிஞர் இரா .இரவி !

நன்றி பாக்யா வார இதழ் !

படத்திற்கு கவிதை !கவிஞர் இரா .இரவி !

போனால் வராது 
குழந்தைப் பருவம் 
ஆடு ஊஞ்சல் !

ஊஞ்சல்  பார்த்ததும் 
மலர்வித்தது 
மலரும் நினைவுகள் !

தள்ளிவிட யாருமில்லாததால் 
தள்ளி விட்டதோ ?
தென்றல் !

ஊஞ்சல்  மட்டுமல்ல 
வாழ்க்கையும்தான் 
ஏற்றம் இறக்கம் !

இப்போதே ஆடிவிடு 
வளர்ந்துவிட்டால் 
ஆடவிட மாட்டார்கள் !
 

-- 

.


கருத்துகள்