தினமணி ! கவிதை மணி !தந்த தலைப்பு ! எப்படி மறப்பேன் ? கவிஞர் இரா .இரவி !

தினமணி ! கவிதை மணி  !தந்த தலைப்பு !

எப்படி மறப்பேன் ? கவிஞர் இரா .இரவி !

எம் தமிழினத்தை கூண்டோடு அழித்தான்
இந்த உலகமே வேடிக்கைப் பார்த்தது !

போரில்லாப்பகுதி என்று அறிவித்து விட்டு  
போய் மக்கள்  குவிந்ததும் குண்டுப் போட்டான் !

விடுதலை கேட்டது குற்றமெனக்  கூறி 
வீதியில் விட்டு சுட்டு மகிழ்ந்தான் !

குழந்தைகள் பெண்கள் முதியோர் என்று பாராமல் 
கண்மூடிதனமாகக்  கொலைகள் புரிந்தான் !

மருத்துவமனை பள்ளி விடுதி என்று பாராமல் 
மனம் போனபடி கொன்று குதூகலித்தான் !

சரண் அடைபவர்களை சுடக்  கூடாது என்று 
சட்டம் சொல்கிறது சுட்டுக் குவித்தான் !

எட்டு நாட்டுப் படைகளின் உதவியுடன் 
சொந்த நாட்டு மக்களை பலியிட்டுச் சிரித்தான் !

கொன்று குவித்த கொடூரன் இலங்கையில் இன்று 
கோலாகலமாக சுதந்திரமாக  வலம் வருகிறான் !

ஐ .நா .மன்றம் உள்ளிட அனைவரும் குற்றவாளிகள் 
அநீதி  இழைத்தவன் மீது நடவடிக்கை இல்லை !

மடிந்தது தமிழினம் என்ற காரணத்தால் 
மனமில்லை தட்டிக் கேட்க யாருக்கும் !

தூக்குத்தண்டனைக்குகுரிய குற்றவாளியை 
குறைந்தபட்சம் கைது கூட செய்யவில்லை !

எம் தமிழினம் அழித்தவனை  எப்படி மறப்பேன் ?
இனவெறி பிடித்த மிருகத்தை எப்படி மன்னிப்பேன் ?

மறக்க முடியாத வடு நெஞ்சில் உள்ளது 
மன்னிக்க முடியாத வெறி மனதில் உள்ளது !


-- 

கருத்துகள்