படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது !  கவிஞர் இரா .இரவி !


ஐதராபாத் நகரில்  ஜூன்-11 அன்று, திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் நடத்தும்
9ஆம் ஆண்டு தமிழ் விழா-2016. வாழ்த்து கவிதை.


 கவிஞர் ப.கண்ணன்சேகர். திமிரி. பேச : 9894976159.


வான்புகழ் வள்ளுவம் வழியினை ஏற்று
        வளமிகு தமிழை வளர்த்திடும் மன்றம் !
தேன்தமிழ் மக்கள்  தெலுங்கோடு முசுலீம்
        தினந்தோறும் கூடும்  தமிழ்த்திருக் குன்றம் !
கூன்பிறை தொழுதோர்  கோவிந்தா என்றோர்
          கூடியே வாழ்வார்  தமிழோடு இன்றும் !
தூண்போல் தாங்கி  துவளாமல் காத்து
           தொல்தமிழ் இயக்கம்  தொடரும் என்றும் !

மும்மொழி பேசும்  முத்தொளி நகரில்
          முழுமதி பொழிவாய்  முத்தமிழ் மணக்கும்
செம்மொழி தமிழின்  சிறப்பினைக் கேட்டு
          சார்மினா கோட்டை  சங்கீதம் படிக்கும் !
நம்மொழி தமிழின்  நடையினைப் பார்த்து
          நாளும் கவிதை  கோல்கொண்டா வடிக்கும்!
எம்மொழி பேசினும்  திராவிட நாட்டில்
          செம்மொழி தமிழே ஊற்றாய் இருக்கும் !

கொள்கை வழுவா  குலத்தமிழ் என்றே
         குழந்தை கற்றிட கொடுத்திடு வாழ்வில் !
கல்லும் போதே கலப்படம் இல்லா
        கற்கண்டு தமிழை  கரைத்திடு நாவில் !
இல்லம் மட்டும்  இருப்பதை மாற்றி
        எங்கும் தமிழை ஒலித்திடு பாரில் !
வள்ளுவர் தமிழை  வளர்ப்போர் தம்மை
                     வணங்கி தினமும் வாழ்த்திடு பூவில் !

கருத்துகள்