படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி ! நன்றி பாக்யா வார இதழ் !

படத்திற்கு கவிதை !   கவிஞர் இரா .இரவி !

நன்றி பாக்யா வார இதழ் !

மிதித்தவனையும் முன்னேற்றும் 
அகிம்சைவாதி 
மிதிவண்டி !

மகிழுந்தில் வராத மகிழ்ச்சி 
மிதிவண்டியில் வருகிறது 
இன்பத்தில் காதல் !

ஏழைகளின் வாகனம் 
எளிமையான வாகனம் 
மிதிவண்டி !

சுற்றுச்சுழல் மாசாக்காத வண்டி 
சுற்றி வர வசதியான வண்டி 
சுகமான வண்டி !

தேவையில்லை  எரிபொருள் 
மிதித்தால் போதும் 
நகரும் மிதிவண்டி !

விலகு ! விலகு !
காதலர் வண்டி வருது 
விலகு ! விலகு !

ஊர் கண்பட்டால் 
அடிதடியில் முடியும் 
காதல் சவ்வாரி !

பணக்கார இணைகள் வருத்தத்தில் 
ஏழை இணைகள் பரவசத்தில் 
பெரிதல்ல பணம் !

ஆடி மகிழுந்தில் ஊடல் ஜோடி 
மிதி வண்டியில் 
கூடல் ஜோடி !


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்