ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

ஏறும்போது  ரூபாயில் 
இறங்கும்போது பைசாவில் 
பெட்ரோல் !

அன்று உப்புக்கு 
இன்று அனைத்துக்கும் 
வரி !

பண்படுத்தப் படைத்தது 
புண்படுத்தப் பயன்படுது 
மதம் !

உயர் திணையிலிருந்து 
அ ஃ றிணைக்கு இறக்கம் 
சாதி வெறி !

பயிற்றுவிக்கின்றன 
ஊடகங்கள் 
தமிங்கிலம் !


அறிகுறி 
சுனாமிக்கு 
வெப்பமயமாதல் !

வெட்டுதல் அதிகம் 
நடுதல் குறைவு 
மரம் !

அய்வகை நிலத்திலும் 
அமோக சுரண்டல் 
மனிதன்  !

பகிர்ந்துண்ணும் பறவை 
தனித்துண்ணும் மனிதன் 
உயர்திணை எது ?

தொழிலாளி வேடம் 
கோடிகள் ஊதியம் 
கதாநாயகன் !


-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்