அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி .! நன்றி பாக்யா வார இதழ் !

அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி .!

நன்றி பாக்யா  வார இதழ் !

ஓவியம் போன்ற 
நடக்கும் காவியமே 
பார்த்தது போதும் 
சற்றே இமைத்திடு !
 
பொய்க்குதிரை 
நிஜ வண்டி 
போக முடியாது 
சவ்வாரி !

குதிரையைக் கண்டு 
அஞ்சாதவன் 
கன்னியைக் கண்டு 
அஞ்சுகின்றான் !

துப்பட்டாவை துண்டாக்கி 
என் மனதை துண்டாடுதல் 
முறையோ ?

ரசித்தால் தவறு இல்லை 
ருசிக்க நினைத்தல் தவறு !

இமைக்காமல் பார்க்கும்
போட்டியில் 
தோற்றேன் அவளிடம் !

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்