முகப்பு > கவிதைமணி புறக்கணிப்பு: கவிஞர் இரா .இரவி

முகப்பு > கவிதைமணி
புறக்கணிப்பு: கவிஞர் இரா .இரவி
By dn
First Published : 13 June 2016 12:36 PM IST
நம்மை புறக்கணித்தவர்களிடம் திரும்பவும் 
நாம் கெஞ்ச வேண்டிய அவசிமில்லை !
புறக்கணித்ததற்காக வருந்தும் வகையில்
புறம் சென்று வளர்ந்து காட்டுவோம் !
புற கணிப்பு தவறாக செய்து புறக்கணித்தோர்
அக கணிப்பு அறியாதவர்கள் அவர்கள் !
வேண்டாம் என்று நினைத்தவர்களிடம் மறுபடியும்
வேண்டி நிற்பது தன்மானத்திற்கு இழுக்கு !
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மதியோடு சிந்தித்துச் சொல்லி வைத்தனர் அன்று !
நம்மை ஒதிக்கியவர்களிடம் வலிய சென்று
நம்மை சேருங்கள் என்று வேண்டுதல் வேண்டாம் !
விஷ்வரூப வளர்ச்சிக் கண்டு நம்மை
விலக்கியவர்கள் நாளும் வருந்திட வேண்டும் !
புறக்கணித்தவர்களைப் புறத்தாக்குதல் செய்யாமல்
பிரமாண்டமாக வளர்ந்து அகத்தாக்குதல் செய்வோம் !
ஏளனம் பேசி எள்ளி நகையாடியவர்கள் நமது
எழுச்சி வளர்ச்சிக் கண்டு கூனிக் குறுகிட வேண்டும் !
தகுதியில்லை என்று நினைத்தவர்கள் முன்பு
தகுதியை வளர்த்து பிரமிக்க வைக்க வேண்டும் !
எளியவன் என்று எளிதாக எண்ணியவர் முன்
வலியவனாக வாழ்வில் வளர்ந்துக் காட்டுவோம் !
துட்சமாக நினைத்துத் தூக்கி எறிந்தவர்கள் முன்னே
உச்சமாக உயர்ந்து தவறை உணர்ந்திட வைப்போம் !
தாழ்வுமனப்பனமையைத் தகர்த்திடுவோம்
தன்னம்பிக்கையை நாளும் வளர்த்திடுவோம் !
புறக்கணித்தவர்களின் கணிப்பைப் பொய்யாக்கி
புதுப்பாதையில் வெற்றி நடை போடுவோம் !
புறக்கணிப்பைத் தோல்வியாகக் கருத வேண்டாம்
புறக்கணிப்பை வெற்றிக்கான முதல்படியாக்கிடுவோம்.



http://www.dinamani.com/kavithaimani/2016/06/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5/article3480339.ece

கருத்துகள்