வாழ்க பல்லாண்டு இசையின் ராசா இளையராசா ! கவிஞர் இரா .இரவி !

வாழ்க பல்லாண்டு இசையின் ராசா இளையராசா !  
கவிஞர் இரா .இரவி !

பிறப்பு பண்ணைப்புரம் 
சிறப்பு இசையுலகம் 
இளையராசா !

பண்டிதருக்கும் பிடிக்கும் 
பாமரருக்கும் பிடிக்கும் பாட்டு 
இளையராசா !

பெயருக்கு ஏற்றபடி 
இசையில் ராசாங்கம் 
இளையராசா !

ஓடாத படங்களையும் 
ஒட்டியது உன் பாடல் 
இளையராசா !

கவலை மறக்க 
மருந்து உன் பாட்டு 
இளையராசா !

சிம்பொனி   இசையமைத்து 
சிகரம் தொட்டவர் 
இளையராசா !

சோகம் நீக்கி 
சுகம் தந்தது உன் பாடல் 
இளையராசா !  

இசையில் புதுமை 
கேட்டிட இனிமை 
இளையராசா !  
 
திரையில் ஈந்தவர் 
கிராமிய இசையை
இளையராசா !  

பெரியவர்களும் ரசிப்பர்
பிறந்த குழந்தையும்  ரசிக்கும் 
இளையராசா !  

நளினமாக நல்கியவர் 
நவீன   இசையும் 
இளையராசா !  

மேஸ்ட்ரோ பட்டம் பெற்ற 
மண்ணின் மைந்தன்   
இளையராசா !  

உருக வைத்தவர் 
திருவாசகம் இசைத்து 
இளையராசா ! 

உலகம் முழுவதும் 
ஒலிக்கும் பாட்டு 
இளையராசா ! 

இசை என்றால் இளையராசா 
இளையராசா என்றால் இசை 
வாழ்க பல்லாண்டு !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்