தந்தை ! கவிஞர் இரா .இரவி !


தந்தை !      கவிஞர் இரா .இரவி !

மகனுக்கு அறிவைக் கற்பிப்பிவர்  தந்தை !
மகனுக்கு உலகை உணர்த்துபவர் தந்தை !

குடும்ப பாரம் தலையில் சுமப்பவர் தந்தை !
குடும்பத்தின் தலைவராக விளங்குபவர் தந்தை !

தன்  குடும்ப மானம் காப்பவர் தந்தை !
தன்னைப் பற்றிய கவலையின்றி வாழ்பவர் தந்தை !

உப்பு  மூட்டை சுமந்து விளையாடுபவர் தந்தை !
உப்பெனெ வாழ்வின் அவசியமானவர்  தந்தை !

நெறிப்படுத்தி நல்வழி காட்டுபவர் தந்தை !
நன்மை தீமை எடுத்து  இயம்புபவர் தந்தை ! 

தோழனாக இருந்து தோள் கொடுப்பவர் தந்தை !
துவண்டால் தன்னம்பிக்கைத் தருபவர் தந்தை!

வாழ்வியல் உண்மைகளைப் போதிப்பவர் தந்தை!
வாழ்வில் மறக்க முடியாத உன்னதஉறவு தந்தை !

வாடினால் வாட்டம் போக்குபவர் தந்தை !
வளங்களை வழங்கி மகிழ்பவர் தந்தை !

எதிர்நீச்சலிட்டு  முன்னேற்றுபவர் தந்தை !
எப்பாடுபட்டாவது உறவுகளைக் காப்பவர் தந்தை !

பொறுப்பை உணர்ந்து நடப்பவர் தந்தை !
பொறுப்பை மகனுக்கு உணர்ர்துபவர் தந்தை !

ஈடு இணையற்ற ஒப்பற்ற உறவு தந்தை !
ஈன்றவளுக்கு இணையான உறவு தந்தை !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்