படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! .ஜூன் 24. கண்ணதாசன் பிறந்த நாள் கவிதை ! -ப.கண்ணன்சேகர், திமிரி

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !


.ஜூன் 24. கண்ணதாசன் பிறந்த நாள் கவிதை !

   -ப.கண்ணன்சேகர், திமிரி, பேச : 9698890108.

சிறுகூடல் பட்டியின் சிங்காரத் தமிழே
      சிந்திடும் எழுத்தது செந்தமிழ் அமுதே!
குறுநகை பூத்திடும் குளிர்நிலா முகமே
        குலையாத தமிழினை கொடுப்பது சுகமே!
விறுவிறு நடையென வேட்டிமுனை பிடித்து
        வெற்றிநடை போடுவார் வேந்தராய் நடந்து!
மறுபடி வந்திடு மண்ணிலே பிறந்து
        மயக்கிடும் தேன்தமிழ் மனதில் சுரந்து!

பாமரன் பயிலும் பல்கலைக் கழகம்
        பாலையும் பசுமையாய் பாடலைக் கேட்டு!!
கோமான் வீட்டிலும் குடிசையில் ஒலிக்கும்
         கொடுத்திடும் தத்துவம் குறைவிலா நெறிகள்!
பூமண வாசமாய்  பொன்னான இந்துமதம்
         பொலிவாய் எழுதினார் புகழ்மிக்க காவியம்!
பா’மண வடிவில் பரலோக இறைவனை
          படித்திட தந்தார் பார்போற்றும் கவிஞன்!

சொல்லாட்சி கருத்தாழம் சுடரொளிக்கும் பாடலே
           சொல்லுகிற தத்துத்தால் சொக்கியது மனங்களே!
நல்லாட்சி திரையினில் நாளுமே பேசிடும்
           நானிலம் மறவா நற்தமிழ் கவிஞர்!
கல்லாத மக்களும் கற்றனர் இலக்கியம்
           காற்றினது அலையால் கவியரசரின் தரிசனம்!
நில்லாத காலத்திலும் நினைவில் நின்றது
            நிறைவாய் கவிஞரின் நல்லபல பாடலே!

             

கருத்துகள்